முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணுக்குத் தெரியாமல் மிரட்டும் இமயமலையின் பெரிய ஆபத்துகள்

இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது பனிப்பாறை ஏரிகளின் அளவை ஆபத்தான முறையில் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவை கண்காணிக்கப்படாத பிற ஆபத்துகளையும் ஏற்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இரு துருவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இமயமலைப்பகுதியில்தான் உலகிலேயே மிக அதிகமான பனிப்பாறைகள் இருக்கின்றன. புவி வெப்பமடைதலால் மில்லியன் கணக்கான டன் பனி இங்கு உருகியுள்ளது. இதுபோன்ற ஆபத்துகள் குறித்து நாம் எவ்வளவு தூரம் அறியாமையில் இருக்கிறோம் என்பதற்கு உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலியில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவு மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு என்று நிபுணர்கள் நம்புகின்றனர். "இத்தகைய ஆபத்துகளின் பின்னணியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றி விரிவான புரிதல் நம்மிடம் இல்லை" என்று அமெரிக்காவின் மூத்த புவியியலாளரும் இமயமலை பேரழிவுகள் பற்றிய ஆராய்ச்சியாளரும், உத்தராகண்ட் பேரழிவு குறித்து ஆராய்ச்சி செய்துவருபவருமான ஜெஃப்ரி கார்ஜெல் கூறுகிறார். உத்தராகண்ட் நிகழ்வுகள் போன்றவை நடக்கும்போது நாம் செயலில் இறங்குகிறோம். ஆனால் பனிப்பாறைகள் உருகுவதன் மூலமாக ஏ