முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய இராசிபலன்கள் (28.02.2020)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்
-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். நிதானம் தேவைப்படும் நாள்.
மிதுனம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலை யாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.
கடகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர் கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.வியாபாரம் சூடுபிடிக்கும் வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள்.
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வீர்கள் அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.
கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வ தால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒரு வரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.


துலாம்: அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்பு வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர் கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்
தனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பண பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கும்பம்: உங்கள் பேச்சில்அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர் கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம்வரும். நட்புவட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்ந்து கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்