முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவரை முறைத்து பார்த்த குழந்தை – இணையத்தில் வைரல் புகைப்படம்

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் மிக பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழவே செய்கின்றன. மிகவும் அரிதாக புன்னகை பூக்கும் குழந்தைகளும் உண்டு. அதே சமயம் சில குழந்தைகள் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இன்றி இருக்கும். அந்த சமயத்தில் டாக்டர்கள் எதையாவது செய்து, குழந்தையை அழ வைப்பார்கள்.
இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டயானே டிஜீசஸ் பார்போசா என்ற பெண்ணுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அந்த குழந்தை அழாமல் இருந்தது.
எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை சோதிப்பதற்காக டாக்டர்கள் குழந்தையை அழ வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த குழந்தை அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்தது.
பின்னர் டாக்டர் குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்தவுடன் குழந்தை ‘வீல்’ என்று அழுது இயல்பு நிலைக்கு திரும்பியது.
முன்னதாக, டயானே, தனது குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக ஏற்கனவே நியமித்திருந்த தொழில்முறை புகைப்பட கலைஞர் ஒருவர் குழந்தை டாக்டரை முறைத்து பார்த்ததை துல்லியமாக படம் பிடித்தார்.
பின்னர் அவர் அதை ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்