முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குப்பிளானில் பெருமளவில் களவுபோகும் மரக்கறிகள்

யாழ்ப்பாணம் – குப்பிழான் தெற்கு காடாகடம்பை இந்து மயானத்திற்கு அருகில் உள்ள தோட்ட நிலங்களில் செய்கைபண்ணப்பட்டுள்ள மரக்கறிகள் அடிக்கடி களவாடப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உருளைக்கிழங்கு, பீற்ரூட், பூசினி ஆகிய மரக்கறிகளே திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பயிரிடப்பட்டிருந்த பல பாத்தி உருளைக் கிழங்குகள் பிடுங்கி எடுக்கப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனது தோட்டத்தில் மட்டும் சுமார் 300 கிலோ வரையான உருளைக் கிழங்குகள் இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அதேபகுதியிலுள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 150 கிலோ பீற்ரூட்டும் களவாடப்பட்டுள்ளது.
தற்போது குடாநாட்டில் மரக்கறி விலைகள் அதிகரித்த நிலையில் மரக்கறிகள் திருடப்படுவது விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள எங்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்