முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்பியது சீனா? கை மீறியது கொரோனா- என்ன செய்யப் போகின்றன ஐரோப்பா?

அனைத்து நாடுகளின் கைகளை மீறியது கொரோனா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கை
COVID-19 கிருமிப்பரவல் முக்கியமான கட்டத்தை
எட்டியுள்ளதுடன் அது கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என்று எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் உருவாகிய கொரோனா தற்போது 30 நாடுகளுக்கும் அதிகளவில் பரவியிருக்கிறது. 3000 இற்கும் அதிகளவானவர்கள் பலியாகியுள்ள நிலையில், ஈரான், இத்தாலி, தென்கொரியா, பிரித்தானியா, சுவிஸ்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவும் கொரோனாவிற்கு இலக்காகியிருக்கின்றன.
பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனா நம்பிக்கை வெளியிட்டிருந்தாலும், அந்நாடு உண்மைகளை மறைப்பதாக சர்வதேச ஊடகங்கள் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையிில், உலக நாடுகள் COVID-19 கிருமித்தொற்று கொள்ளை நோயை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்று உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 38.
மகளிர், குடும்ப விவகார அமைப்பின் துணைத் தலைவர் உட்பட, ஈரானின் உயர் அதிகாரிகள் சிலருக்கு COVID-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகின் மற்ற பாகங்களிலும் கவலைக்குரிய நிலை தொடர்வதாக டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
இந்தநிலையில், உலக நாடுகள் கடும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சீனா மட்டுமல்ல ஏனைய நாடுகளும் பெரும் அழிவை சந்திக்க நேரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்