முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரடங்கு அமுல் நேரத்தில் மக்களுக்காக சில முக்கிய தீர்மானங்கள்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக
நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.
உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை.
இதனால் ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் மக்கள் தமது விசேட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.
இதனால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதியால் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதற்கமைய இன்று (2020.03.29) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி விசேட செயலணிக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஓய்வூதியத்தைச் செலுத்துதல்
1. ஏப்ரல் மாதம் 2, 3 ஆந் திகதிகளில் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் செலுத்தப்படும்.
2. இந்த இரண்டு தினங்களினுள் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இருப்பின் ஏப்ரல் 6 ஆம் திகதி கொடுப்பனவுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும் 02 வழிமுறைகள் காணப்படுகின்றன.
I. அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக
II. அந்தந்த வங்கிகள் ஊடாக
4. அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும் ஓய்வு பெற்றோரின் வீடுகளுக்கு அல்லது கிராம அலுவலர் பிரிவுக்கு அஞ்சல் திணைக்களம் ஊடாக ஓய்வூதியம் கொண்டுவந்து ஒப்படைக்கப்படும்.
5. அந்தந்த வங்கிகள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வோரின் பணம் ஏற்புடைய வங்கிக் கணக்குகளுக்கு ஏப்ரல் 2,3 ஆகிய திகதிகளில் வரவு வைக்கப்படும்.
6. வங்கிக் கணக்குகளில் காணப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் ஓய்வுபெற்றோருக்கு ஊரடங்குச் சட்டம் காரணமாக ஏற்படும் போக்குவரத்துச் சிரமத்தைத் தவிர்ப்பதற்கான முறைமையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேவையுடைய ஓய்வு பெற்றோர் தாம் வதியும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர் மூலம் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
இந்த ஓய்வூதிய உரித்தாளிகள் அரசாங்கத்தினால் அருகிலுள்ள வங்கிக்கு ஏப்ரல் 2,3 ஆந் திகதிகளில் அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அந்த வங்கிகள் மூலம் அவர்களது ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதற்கு முப்படையினர் மற்றும் பொலிசார் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதுடன், இதற்கு ஏற்புடைய கிராம உத்தியோகத்தர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.
7. அந்தந்த நகரங்களில் காணப்படும் அனைத்து வங்கிகளும் குறைந்தபட்சம் ஒரு கிளையினையாவது இந்நாட்களில் திறந்து வைத்திருக்க அரச மற்றும் தனியார் வங்கியாளர்கள் இணங்கியுள்ளனர் என்பதையும் அறியத் தருகிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்