முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனாவில் இருந்து மீண்ட சுவிஸ் செவிலியரின் அனுபவம்

சுவிட்சர்லாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், செவிலியர் ஒருவர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பெர்ன் மண்டலத்தில் பிராந்திய மருத்துவமனை ஒன்றில் மிலேனா செவிலியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று தாம் பயணம் செய்த ரயிலில் ஒருவர் கடுமையாக இருமியபடி இருந்ததாகவும், அவரில் இருந்தே தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எனவும் மிலேனா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அடுத்த வாரம், மிலேனா தொண்டை வலியால் அவதிக்கு உள்ளானதாகவும், தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சோதனை முடிவுகள் வரும் வரையில் முகக்கவசம் அணிந்து மருத்துவமனையில் தாம் பணியாற்றியதாகவும் மிலேனா தெரிவித்துள்ளார்
சோதனை முடிவுகள் வந்த பின்னர் குடியிருப்பில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானதாகவும், தற்போது இரண்டு வாரத்திற்கு பின்னர் பூரண குணமடைந்துள்ளதாகவும் மிலேனா தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் தற்போது பணிக்கு திரும்பியுள்ளதாகவும் மிலேனா குறிப்பிட்டுள்ளார்.
இனி பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம், மட்டுமின்றி தெளிவான மனசாட்சியுடன் பொதுமக்களுடன் இணைந்து வணிக வளாகங்களுக்கும் செல்லலாம் என்கிறார் மிலேனா.
இருப்பினும் தமது பாட்டியை சந்திப்பதில் தாம் இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்