முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனாவின் காலம் முடியப்போகின்றது! பிரபல விஞ்ஞானி ஆரூடம்


கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt இதை தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றினால் 718,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், Michael Levitt சில உண்மையான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இதனால் விஞ்ஞானி Michael Levitt கூறிய கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று Michael Levitt அவர்கள் மதிப்பிட்டு கூறியிருந்தார். அவரின் கூற்றின் படியே, சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்