முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வூதியம் வழங்கும் திகதி அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவை தபால் மற்றும் வங்கி சேவைகள் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
. தபால் சேவை மூலம் ஓய்வூதியத்தைப் பெறுபவர்களுக்கு வீடுகளுக்கே அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :
ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஓய்வூதிக் கொடுப்பனவு வழங்கப்படாதவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழங்கப்படவுள்ள ஓய்வூதியக் கொடுப்பனவை தபால் அலுவலகத்திலும் குறித்த வங்கி கணக்குகளிலிருந்தும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தபால் சேவை மூலம் பெற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு தபால் ஊழியர்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிப்பதற்கும் அல்லது கிராம சேவகர் ஊடாக கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஏப்ரல் 2 அல்லது 3 ஆம் திகதி வைப்பிலிடப்படும். இவ்வாறு வங்கிகளிலிருந்து ஓய்வூதியத்தை பெறுபவர்களுக்கு ஊரடங்கின் போது பிரயாணம் செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே அவ்வாறானவர்கள் கிராம சேவகரிடம் பயணம் செய்வதற்கான ஆவணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குறித்த ஆவணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் குறித்த திகதிகளில் மாத்திரம் வங்கிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். கிராம சேவகருடன் தொடர்பு கொண்டு பொலிஸாருடன் முப்படையினரும் இணைந்து போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுப்பர்.
இதற்காக ஒவ்வொரு வங்கியினதும் நகரத்திற்கு ஒரு கிளையேனும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

          உங்களுக்கு    பிடித்திருந்தால்  உடன்   பகிரவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்