முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவிஸ் குடிமக்கள் கட்டுப்பாடுகளை மதித்து நடப்பது உறுதியானது

சுவிஸ் அரசு அறிவித்திருந்தபடி, மொபைல் டேட்டாவை கண்காணித்ததன் மூலம், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து,
சுவிட்சர்லாந்தில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 20ஆம் திகதி, கொரோனா பரவுவதையும், அது பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதையும் தடுப்பதற்காக, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது சுவிஸ் அரசு
அவற்றில் முக்கியமானது மக்கள் ஓரிடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதை தவிர்ப்பது.
மக்கள் விதிகளுக்கு கட்டுப்பட்டு, நடமாட்டத்தைக் குறைக்கிறார்களா என்பதை மொபைல் டேட்டா மூலம் கண்காணித்து, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முடிவு செய்ய அரசு முடிவு செய்திருந்தது.
அதை வைத்துத்தான் தற்போது மாலை 6 மணிக்கு மேல் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை 24 மணி நேர ஊரடங்கு உத்தரவாக்குவதா இல்லையா என்பதையும் முடிவு செய்ய இருந்தது அரசு.
இந்நிலையில், ஏற்கனவே அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் மட்டுமே தொடரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மொபைல் டேட்டா கண்காணிப்பு, மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் நடமாடுகிறார்களா என்பதை கண்காணிக்க மட்டுமே எனவும், அதைக் குறித்து பயப்படவேண்டாம் என்றும் சுவிஸ் உள்துறை அமைச்சர் Alain Berset தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்