முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாழில் இப்படியொரு மனிதாபிமானமிக்க தனியார் நிறுவனம்

யாழில் சுய நலமுள்ள மனிதர்கள்தான் அதிகம், அதில் மனிதாபிமானமிக்க நல்ல மனிதர்களை காண்பதென்பது கடலுக்குள் முத்தெடுப்பதுபோன்றது.
ஆம் அப்படியொரு முத்தைத்தான் இலங்கை தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
யாழ் வைத்தியசாலையில் உயிரை பணயம் வைத்து போராட ஏனைய மாவட்டங்களிலிருந்து வைத்தியர்கள் யாழ் வந்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கு வீடு வழங்க மறுக்கின்றனர் யாழ் மக்கள், தங்களுக்கு உதவவந்தவர்களுக்கே உதவாத மக்களை இலங்கையில் யாழில் மட்டும்தான் பார்க்கலாம்.
இப்படி நிலமை இருக்க ஒரு தனியார் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு பாரட்டப்பட்டு வருகிறது.
குறித்த அறிவிப்பு பின்வருமாறு அமைந்திருந்தது,
யாழ்ப்பாணத்தில் மக்களின் நலனுக்காக பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களே!
தற்காலிக வதிவிடத்தில் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திந்திருப்பதாகவும், வாடகை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்ற நிர்ப்பந்தித்த செய்திகள் சில தற்போது எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் சமூகநலன் கருதிய எங்களால் முடிந்த பணியை தற்போது நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளோம்.
‘COSY HOTEL & Restaurant’ உரிமையாளர்களாகிய நாங்கள் எங்கள் தங்குமிடத்தை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளோம். மக்கள் பணி தீரும் வரை நீங்களும் ஆரோக்கியமாக உங்கள் சேவைகளை எங்கள் மக்களுக்கு தொடர என்றும் துணை நிற்போம். ஏதேனும் மனஉழைச்சலுக்கு ஆளாகாமல் உங்கள் பணியை தொடருங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்