முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லண்டனில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோர் அஞ்சத் தேவையில்லை

பிரித்தானியாவில் அகதிகளாக இருக்கும் நபர், அகதி அந்தஸ்த்து நிராகரித்ததால் ஒளிந்து திரியும்
நபர்கள் மற்றும் முதல் கட்டமாக நிராகரித்து 2ம் கட்டத்திற்காக வழக்கை தொடுக்க காத்திருக்கும் அனைவருக்கும், பிரித்தானிய அரசு வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை கொடுக்கிறது. மேலும் 2ம் நிலை வழக்குகள் மறு அறிவித்தல் வரும் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது போக சிலர் பொலிஸ் நிலையம் சென்று கையெழுத்து போடவேண்டி இருக்கும் அல்லவா. அவர்கள் அப்படி செய்ய இனி தேவை இல்லை.
நஷனல் அசேலம் சீக்கர் சர்விஸ்(NASS)  ஊடாக , நீங்கள் தொடர்பு கொண்டு , உங்களுக்கான உதவித் தொகைகளை பெற்றுக் கொள்ளலாம். இது போக உங்கள் வழக்குகள் அனைத்தும் தாமாகவே(Automatic) பிற்போடப்பட்டுள்ளதால். நீங்கள் எந்த ஒரு பணத்தையும் உங்கள் சொலி சிட்டருக்கு கொடுக்க தேவை இல்லை.
சில காசு பிடுங்கி சொலிசிட்டர்மார்கள், தாம் -தான் போன் செய்து, வழக்கை பிற்போட்டோம் என்று கூறி, தமிழர்களிடம் பணத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த நிலுவையில் உள்ள வழக்குகள், தாமாகவே பிற்போடப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் எந்த பணத்தையும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இது போக ரூரிஸ் விசாவில் லண்டன் வந்து பல வருடங்களாக மறைந்து வாழ்ந்து வரும் நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அணுகினால், பால் பாண் போன்ற உணவு வகைகளை இலவசமாக அவர்கள் கொடுப்பார்கள். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரித்தானிய அரசு ஏற்படுத்தியுள்ள மாறுதல்களே.

தயவுசெய்து வாசித்த பின்னர் பகிரவும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்