முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவரின் பரிதாப நிலை

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களை உலகமே பாராட்டி ஆதரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் அவரது
குடியிருப்பில் நின்று வெளியேற்றப்பட்டுள்ளார்.
சூரிச் பிராந்திய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் குறித்த 29 வயது இளம் பெண்ணுக்கே இந்த பரிதாப நிலை.

உலகின் பல நாடுகளைப் போன்று சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை அடுத்து குறித்த மருத்துவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
இதுவே, அவரது இரு சக அறைத் தோழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குறித்த மருத்துவரை கிண்டலும் கேலியும் செய்து இறுதியில் குடியிருப்பில் இருந்தே வெளியேற்றியுள்ளனர்.
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவருடன் எப்படி ஒன்றாக குடியிருக்க முடியும் என்ற கேள்வியும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
கடந்த வாரம் அவசர தேவை ஒன்றால் வெளியே செல்ல திட்டமிட்ட மருத்துவரை அவரது அறைத் தோழர்கள் வெளியேற அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் பொலிசாரின் உதவியுடனே குடியிருப்பில் இருங்து வெளியேறும் நிலை ஏற்பட்டது என்கிறார் அந்த மருத்துவர்.
இந்த சூழலில் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட மருத்துவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்