முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிக ஆபத்தில் உள்ள 10 நாடுகளை பட்டியலை வெளியிட்ட ஐ.நா சபை!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின்
பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் உள்ளது என ஐ.நா. உலக உணவு திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 மில்லியனிலிருந்து 250 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏமன், காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, எத்தியோப்பியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, நைஜீரியா மற்றும் ஹைட்டி ஆகிய 10 நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளது.

தெற்கு சூடானில், கடந்த ஆண்டு 61% மக்கள் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. உலக உணவு திட்டம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
தொற்றுநோய்க்கு முன்பே, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகள் ஏற்கனவே வறட்சி மற்றும் மோசமான வெட்டுக்கிளியால் ஏற்பட்ட கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டன.
பேரழிவைத் தவிர்க்க அவசர நடவடிக்கை தேவை என உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி வலியுறுத்தியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்