முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுன்னாகம் சந்தை வியாபாரிகளின் அவலம்

சுன்னாகம் மத்திய சந்தை ஊரடங்கு தளர்வின் பின்னரும் கொரோனாத் தாக்கத்தின் எதிரொலியாக சந்தை
வளாகத்தில் இயங்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால், ஊரடங்கு தளர்வின் பின்னர் சுன்னாகம் சந்தை வியாபாரிகள் பெரும் அசெளரியங்கள், சிரமங்களுக்கு மத்தியில் சுன்னாகம் மீன் சந்தைக்கு அருகில் வீதியிலும், சந்தைக் கட்டடத் தொகுதிக்கு முன்பாகவும், சுன்னாகம் பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாகவும் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் திடீரெனப் பெய்த கடும் மழையால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
வியாபாரிகளின் இந்த அவலமான காட்சிகளைப் பார்த்த பின்னராவது வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட சபை நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்களா?
கொரோனாத் தாக்கத்தைக் கருத்திற் கொண்டு வலி.தெற்குப் பிரதேச சபை சந்தை வளாகத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதி மறுத்துள்ள போதிலும் எமது வியாபார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான மாற்று ஏற்பாடு மேற்கொள்ளாமை ஏன் என சந்தை வியாபாரிகள் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்