முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்கு மாதங்களுக்கு முன்னரே சீனாவுக்கு தெரிந்த இரகசியம்! அமெரிக்கா

கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும் என்று அமெரிக்கா மீண்டும் சீனாவை சீண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போது பேசியுள்ள அவர், ''கொரோனா வைரஸ் தொடர்பான இரகசிய தகவல்கள் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும். உலக சுகாதார அமைப்பு உட்பட அனைத்தும் இந்தத் தொற்றை மெதுவாக அடையாளம் கண்டுள்ளன.

இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை முக்கியமானது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் என்ன நடந்தது என தற்போது அறிந்து கொள்வது முக்கியம்” என்று பேசியுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்றும், சீன அரசின் கட்டளைக்குப் பணியும் நாடு போல் அமெரிக்கா அணுகத் தேவையில்லை என்று சீனத் தூதர் லியு சியாமிங் நேற்று அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா, சீனா மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆய்வு செய்ய தங்களை சீனா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியது. ஆனால், அமெரிக்காவை அனுமதிக்க சீனா மறுத்திருப்பது சுட்டிக்காட்டித்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்