முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

பொதுவாக சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான்
நம்மிடம் உள்ளது.
ஆனால் அந்த காலத்தில் நமது முன்னோர்கள் சிறு உடல் நல பிரச்சினை என்றால் கூட வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தும், மூலிகைகளை வைத்தும் சரி செய்து நூறு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தனர்.
அதுமட்டுமின்றி மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய மூலிகைகளும் உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் ‘கீழாநெல்லி’.
இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது.
கீழாநெல்லியில் ஏரளாமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கீழாநெல்லி இலைகளை அப்படியே அல்லது சாறாகவோ அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அந்தவகையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கீழா நெல்லி எந்த உறுப்புகளை எப்படியெல்லாம் பாதுகாக்கிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
  • கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
  • கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து சிட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரை நீர்மோராக பெருக்கி அதில் விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.
  • மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியவர்கள் 30 மிலி அளவிலும், சிறுவர்கள் 15 மிலி அளவிலும் குடித்துவந்தால் கல்லீரல் சுத்தமாகும்.
  • கீழாநெல்லியை சுத்தம் செய்து அதில் மூன்றுமடங்கு அளவு நீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நீர் ஒருபங்காக சுண்டியது அதை குடித்துவரவேண்டும். தினமும் ஒரு டம்ளர் அளவு இதை குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும். நச்சுகள் நீங்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
  • சர்க்கரை நோயால் அவதிப்படுவர்கள் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு எடுத்துவந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.
  • கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து சம அளவு நீர் சேர்த்து குடித்துவரலாம். அல்லது கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து 5 மடங்கு நீர்விட்டு ஒருபங்காக சுண்டு வரை வைத்து பிறகு குடிக்க வேண்டும். காலை மாலை இரண்டு வேளையும் இதை குடிக்க வேண்டும். இந்த நீரை குடிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் குடித்த பிறகு அரைமணி நேரம் கழியும் வரையும் வேறு எந்த ஆகாரமும் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் குறைவதை உணரமுடியும்.
  • கீழாநெல்லி இலையை அரைத்துவிழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் அளவு கலந்து இலேசாக உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுபுண் குணமாகும். வயிற்று கோளாறுகள் நீங்கும்.
  • தலை உஷ்ணத்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருப்பவரள் கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வு சட்டென்று நிக்கும்.
  • உடலில் சரும வியாதிகள் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் ஓடிவிடும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்