முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளிக்கு திரும்பாவிட்டால் அபராதம் … எச்சரிக்கும் சுவிஸ் அரசு!

சுவிட்சர்லாந்தில் மே 11ஆம் திகதி ஆறாம் வகுப்பு வரையும், ஜூன் 8ஆம் திகதி மேல் நிலை மற்றும்
தொழிற்கல்வி நிறுவனங்களும் செயல்படத் துவங்க இருக்கின்றன.
அப்படி பள்ளிகள் துவங்கும் நிலையில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எவ்வளவு அபராதம் என்பது மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும். சிறுவர்கள் கொரோனாவால் பெரிய அளவில் பாதிகப்படவில்லை என்றாலும், சுவிட்சர்லாந்தில் சுமார் 1,000 பேருக்கும் குறைவானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு, சிறுவர்களில் யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
ஆனால், அவர்களால் முதியவர்களுக்கு கொரோனாவைப் பரப்பமுடியும் என்ற ஒரு கருத்தும் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கொரோனா அச்சம் காரணமாக பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
கட்டாயம் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் சரி, இது எங்கள் வாழ்க்கை, எங்கள் பிள்ளைகளைக் குறித்த விடயங்களை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறியுள்ளனர் ஒரு குழந்தையின் பெற்றோர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்