முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா தாக்கம் தொடக்கம்தான்... நீண்ட காலம் நிலைக்கும்

கொரோனா தாக்கம் தொடக்கம்தான்... நீண்ட காலம் நிலைத்து இருக்கும்: எச்சரிக்கும் உலக சுகாதார
நிறுவனம்

ஏப்ரல்23 ,2020

ஜெனிவா: கொரோனா வைரஸ் நம்முடன் நீண்டகாலம் நிலைத்தே இருக்கும்; இது மிக மோசமான விளைவுகளையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.!

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பூமியில் இன்னமும் நீண்டகாலம் நிலைத்துதான் இருக்கும். அது மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும்.

பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று நோய் என்பது தொடக்க நிலையில்தான் இருக்கிறது.

கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீண்டுவிட்டதாக சில நாடுகள் நினைத்து கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று நோய் தாக்கம் தொடர்பாக சர்வதேச அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில் ஜனவரி 30-ல் அறிவித்தது. இந்த தொற்று நோயை உலக நாடுகள் எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்